கோவை: `தேர்தலில் வெற்றிபெற முடியாது!’ – அ.தி.மு.க அரசை எச்சரித்த சி.பி.ராதாகிருஷ்ணன்

இதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், “கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தை தமிழக அரசு சரியாகக் கையாளவில்லை. இந்த வழக்கில், போலீஸார் சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்கவில்லை. ஒரு சிசிடிவி கேமரா பதிவை வைத்துக் கொண்டு, அவர்தான் 4 கோயில்களையும் சேதப்படுத்தினார் என்று சொல்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சேதப்படுத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதையும் ஏற்க முடியவில்லை. உண்மை குற்றவாளிகளைப் பிடித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தை நாடுவோம்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து, இந்துக்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். இப்படியே இருந்தால் வருகிற தேர்தலில் வெற்றி பெற முடியாது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அ.தி.மு.க கடுமையான விளைவுகளை சந்திக்கும்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *